V4UMEDIA
HomeNewsKollywoodகௌதம் கார்த்திக் நடிக்கும் “செல்லப்பிள்ளை” !

கௌதம் கார்த்திக் நடிக்கும் “செல்லப்பிள்ளை” !

நடிகர் கௌதம் கார்த்திக் நடிப்பில் அடுத்தடுத்து உருவாகி வரும் படங்கள் ஏற்கனவே ரசிகர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பை குவித்திருக்கிறது. இந்நிலையில் தற்போது SST Productions தயாரிப்பாளர் ஃபைரோஸ் ஹுசேன் ஷெரீஃப் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் அருண் சந்திரன் இயக்கும் “செல்லப்பிள்ளை” படத்தில் ஹீரோவாக ஒப்பந்தமாகியுள்ளார். தற்போது இப்படத்தின் முதல்கட்ட பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. படத்திற்காக முன்னணி நடிகர்கள் குழு மற்றும் பிரபல தொழில்நுட்ப கலைஞரகள் தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. அடுத்த மாதத்தில் மொத்த படக்குழுவும் தேர்ந்தெடுக்கப்பட்டு படத்தின் வேலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளது.




படம் குறித்து இயக்குநர் அருண் சந்திரன் கூறியதாவது…

இது ஒரு மாஸ் கலந்த ஆக்சன் படம். கௌதம் கார்த்திக் இது வரையிலும் செய்யாத புது மாதிரியான படமாக இப்படம் இருக்கும். அவர் தற்போது மிக முக்கியமான சில படங்களில் நடித்து வருகிறார். அப்படங்களின் படப்பிடிப்பு பணிகள் முழுமையாய் முடிந்த பிறகு, இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும். இப்படத்திற்கு நாயகனாக கௌதம் கார்த்திக் தேர்ந்தெடுக்கப்பட்டதை பற்றி கூறும்போது… அவரது தந்தை நவரச நாயகன் கார்த்திக்கை போலவே கௌதம் கார்த்திக அவர்களும், எந்த ஒரு கதாப்பாத்திரத்திலும் மிக எளிதாக பொருந்தி போக கூடியவர். ஆகவே எனது திரைக்கதைக்கும், கதாப்பாத்திரத்திற்கும் சரியாக அவர் பொருந்திப் போவார் என நினைத்தேன். இப்படத்தில் கௌதம் கார்த்திக்கின் கதாப்பாத்திரம் கண்டிப்பாக மக்கள் மனதில் நீங்காத இடம் பிடிக்கும். “செல்லப்பிள்ளை” படத்தின் பெயர்க்காரணம் குறித்து கூறும்போது.. கதைக்காக மட்டும் இந்த தலைப்பை வைக்கவில்லை, கௌதம் கார்த்திக் தனது தாத்தா முத்துராமன் மற்றும் தந்தை நவரச நாயகன் கார்த்திக் ஆகியோரின் ரசிகர்களால் செல்லப்பிள்ளையாகவே பார்க்கப்படுகிறார். அவர் அனைத்து தலைமுறையினராலும் அன்போடு நேசிக்கப்படுகிறார். அதனால் “செல்லப்பிள்ளை” தலைப்பு மிகச் சரியான தலைப்பாக இருக்கும்.


தற்போது கௌதம் கார்த்திக் தமிழில் முக்கியமான சில படங்களில் நடித்து வருகிறார். சிலம்பரசன் TR உடன் இணைந்து “பத்து தல” படத்தில் நடித்து வருகிறார். மேலும் மதுரையை பின்னணி களமாக கொண்டு உருவாகும் புதியதொரு குற்ற விசாரணை செய்யும் திரைப்படத்திலும் நடிக்கிறார்.

Most Popular

Recent Comments