V4UMEDIA
HomeNewsKollywoodவிஷ்ணு விஷாலின் அடுத்த படத்தில் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ் !!

விஷ்ணு விஷாலின் அடுத்த படத்தில் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ் !!

தமிழ் திரையுலகின் இளம் நடிகர்களில் ஒருவராகிய விஷ்ணு விஷால் தற்போது காடன், ஜெகஜால கில்லாடி, எப்.ஐ.ஆர் மற்றும் மோகன்தாஸ் என தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இவற்றில் காடன் மற்றும் ஜெகஜால கில்லாடி விரைவில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எப்ஐஆர் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து விரைவில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துவங்கும் என்றும் கூறப்படுகிறது.இந்த நிலையில் விஷ்ணு விஷால் நடிக்கும் அடுத்த திரைப்படமான மோகன்தாஸ் என்ற படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

Image

இந்த படத்தில் ஏற்கனவே விஷ்ணுவிஷால் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தை முரளி கார்த்திக் என்ற ஒரு இயக்க உள்ளார் என்பதும் நாம் அனைவரும் அறிந்ததே.இந்த நிலையில் தற்போது இப் படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து உள்ளார் என்ற தகவல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Most Popular

Recent Comments