V4UMEDIA
HomeNewsKollywoodபிரபல இயக்குனர் சேரனுடன் இணையும் நடிகர் கெளதம் கார்த்திக் !!

பிரபல இயக்குனர் சேரனுடன் இணையும் நடிகர் கெளதம் கார்த்திக் !!

கடந்த ஆண்டில் வெளியான , யோகிபாபு எமதர்மனாக நடித்த தர்மபிரபு வெற்றிப்படத்தின் மூலம் எல்லோரது கவனத்தையும் ஒட்டு மொத்தமாக ஈர்த்த ஸ்ரீ வாரி பிலிம்ஸ் அடுத்ததாக முன்னணி நடிகர்கள் பலரையும் வைத்து வைத்து ஒரு படத்தை தயாரிக்கவிருக்கிறார்கள் .

குடும்ப உறவுகளின் வலிமையையும் ஒற்றுமையையும் மேம்படுத்தும் விதமாக உருவாகும் இந்த திரைப்படத்தில் கெளதம் கார்த்திக்குடன் இயக்குனர் சேரன் இணைந்து நடிக்கிறார் . டாக்டர் ராஜசேகர் ஜீவிதாவின் இரண்டாவது மகள் ஷிவாத்மிக்கா அறிமுக கதாநாயகியாகவும் நடிக்கவிருக்கிறார்கள் .

டேனியல் பாலாஜி , சரவணன் , கிழக்கு சீமையிலே விக்னேஷ் , சிங்கம் புலி , ஜோமல்லூரி , கவிஞர் சினேகன் , நமோ நாராயணன், சௌந்தர்ராஜன் , விஜய் டிவி ஜாக்குலின் , மௌனிகா, மைனா , பருத்திவீரன் சுஜாதா , ஜானகி , பிரியங்கா , நக்கலைட் தனம் என ஏராளமான நட்சத்திரங்களோடு ஒரு குடும்ப சித்திரமாக உருவாகும் இந்த திரைப்படத்தை நந்தா பெரியசாமி எழுதி இயக்க , பொர்ரா பாலபரணி ஒளிப்பதிவில் , சிவப்பு மஞ்சள் பச்சை புகழ் சித்துகுமார் இசையமைப்பில் கவிஞர் சினேகன் பாடல்கள் எழுத , ஸ்ரீ வாரி பிலிம்ஸ் தயாரிப்பில் P. ரங்கநாதன் தயாரிக்க வரும் மார்ச் மாதம் முதல் தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெறவுள்ளது .

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments