V4UMEDIA
HomeNewsKollywoodகர்ணன் படத்தின் டப்பிங்கை முடித்த நடிகர் தனுஷ் !!

கர்ணன் படத்தின் டப்பிங்கை முடித்த நடிகர் தனுஷ் !!

இயக்குனர் மாரி செவ்ராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் அவர்கள் ‘கர்ணன்’ படத்தில் நடித்து வருகிறார். வி கிரேயஷன்ஸ் சார்பில் கலைப்புலி.எஸ்.தாணு அவர்கள் தயாரிக்கிறார். மேலும் காமெடி நடிகராக யோகி பாபு நடிக்கிறார். இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக ராஜிஷா விஜயன் நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் நட்டி நட்ராஜ் மற்றும் லால் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.


இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்த நிலையில், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு அவர்கள் ’கர்ணன்’ திரைப்படம் திரையரங்குகளில் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும் என அறிவித்துள்ளார். தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிகிறது.இந்நிலையில் இப்போது தனுஷ் கர்ணன் படத்தின் டப்பிங் பணிகளை முடித்துள்ளார். நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ள பதிவில் ‘டப்பிங் பணிகள் முடிந்தன.. கர்ணனின் குரலை நீங்கள் விரைவில் கேட்பீர்கள்’ என கூறியுள்ளார்.

Most Popular

Recent Comments