V4UMEDIA
HomeNewsKollywoodசெல்வராகவன் மற்றும் SJ சூர்யாவின் நெஞ்சம் மறப்பதில்லை ரிலீஸ் தேதி அறிவிப்பு.. மிரட்டும் புதிய டீசர்!!

செல்வராகவன் மற்றும் SJ சூர்யாவின் நெஞ்சம் மறப்பதில்லை ரிலீஸ் தேதி அறிவிப்பு.. மிரட்டும் புதிய டீசர்!!

செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்து பல ஆண்டுகளாக கிடப்பில் இருக்கும் நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படம் மார்ச் முதல் வாரத்தில் ரிலீஸாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

செல்வராகவன் இயக்கிய ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தில் எஸ்.ஜே.சூர்யா, நந்திதா ஸ்வேதா, ரெஜினா உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இயக்குநர் கெளதம் மேனன் மற்றும் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன் இருவரும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர். கௌதம் மேனனுக்கு ஏற்பட்ட பொருளாதார சிக்கல்களால் முடங்கிய பல படங்களில் இந்த படமும் ஒன்றாக அமைந்தது. அதன் பிறகு செல்வராகவன் இயக்கிய என் ஜி கே படம் ரிலீஸாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது.

Image

இந்நிலையில் இப்போது செல்வராகவன் தனுஷ் நடிப்பில் கலைப்புலி எஸ்.தாணு அவர்களின் தயாரிப்பில் 1 படத்தினை இயக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

 செல்வராகவன் இயக்கிய ஆயிரத்தில் ஒருவன் மற்றும் புதுப்பேட்டை ஆகிய படங்களும் ரி ரிலீஸ் ஆகியுள்ளன. இப்போது ரசிகர்கள் மத்தியில் செல்வராகவனுக்கு இருக்கும் கிரேசை பயன்படுத்திக் கொண்டு அவர் இயக்கிய நெஞ்சம் மறப்பதில்லை படத்தை ரிலீஸ் செய்துவிடலாம் என்ற முயற்சியில் தயாரிப்பாளர் ஈடுபட்டுள்ளாராம். பிரபல தயாரிப்பாளர் ராக்போர்ட் முருகானந்தம் தமிழ்நாடு திரையரங்க உரிமையை வாங்கி வெளியிட உள்ளாராம்.

இதையடுத்து படத்தை மார்ச் 5 ரிலிஸ் செய்வதாக அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியாகியுள்ளது.

Most Popular

Recent Comments