ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் கலந்துகொண்டார். அப்போது இவர்கள் இணைந்து தயாரித்துள்ள “கூழாங்கல்” என்ற படத்திற்கு விருது கிடைத்துள்ளது. இதனால் மொத்தப் படக்குழுவும் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை நயன்தாரா. அனைவராலும் லேடி சூப்பர்ஸ்டார் என அழைக்கப்படுபவர். இவரும் இவரது காதலர் இயக்குனர் விக்னேஷ் சிவன் இணைந்து, கூழாங்கல் என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளனர். இப்படத்தை வினோத்ராஜ் இயக்குகிறர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இப்படம் ரோட்டர்டாம் சர்வதேசத் திரைப்பட விழாவில் போட்டியிட்டுள்ளது. எனவே அங்கு சென்றுள்ள நடிகை நயன் தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி -சேலையில் அணிந்தபடி சென்று அனைவரது கவனத்தையும் ஈர்த்தனர்.
இப்புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்நிலையில் ரோட்டர்டாம் சர்வதேசத் திரைப்பட விழாவில் போட்டியிட்ட விக்னேஷ் சிவன், நயன்தாரா தயாரிப்பில் இயக்குநர் விக்னேஷ் ராஜ் இயக்கியுள்ள இப்படத்திற்கு The prestigious award கிடைத்துள்ளதாக விக்னேஷ் சிவன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்திய சினிமாக்கள் மட்டுமே இத்திரைப்பட விழாவில் கலந்துகொண்டதாகவும், இதில், கூழாங்கல் திரைப்படம் மட்டுமே விருது வென்றதாகவும். அதுவும் இவ்விருதைப் பெரும் முதல் தமிழ் சினிமா இதுவென்று அவர் குறிப்பிட்டுள்ளார்.