ஹாலிவுட்டில் பிரபல சூப்பர்ஹீரோ படமான அவெஞ்சர்ஸ் படம் மூலமாக உலகம் முழுவதும் புகழ் பெற்றவர்கள் இயக்குனர்களான ஜோ ரஸோ மற்றும் ஆண்டனி ரஸோ. இவர்களது இயக்கத்தில் அடுத்ததாக தி க்ரே மேன் என்ற படம் உருவாக உள்ளது. நாவல் ஒன்றை தழுவிய இந்த படத்தில் கேப்டன் அமெரிக்காவாக நடித்த க்ரிஸ் எவான்ஸ், ரியான் கோஸ்லிங் உள்ளிட்ட பிரபல ஹாலிவிட் நட்சத்திர நடிகர்கள் நடிக்கின்றனர். இந்த படத்தின் முக்கியமான கதாப்பாத்திரம் ஒன்றில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தனுஷ் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் விரைவில் தொடங்க உள்ள நிலையில் நடிகர் தனுஷ் நாளை அமெரிக்கா புறப்படுகிறார்.
அங்கு படப்படிப்பில் கலந்து கொள்ளும் அவர் மே மாத இறுதியில் மீண்டும் இந்தியா திரும்புவார் என கூறப்படுகிறது. இந்நிலையில் ஹாலிவுட்டில் நடிக்க செல்லும் தனுஷிற்கு இந்தியா முழுவதும் உள்ள அவரது தீவிர ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.