V4UMEDIA
HomeNewsKollywood'சக்ரா'' பட ரிலீஸ் தேதி அறிவிப்பு !!

‘சக்ரா” பட ரிலீஸ் தேதி அறிவிப்பு !!

விஷால் பிலிம் பேக்டரி சார்பில் தயாரித்து விஷால் நடித்து எம்.எஸ்.ஆனந்தன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘சக்ரா’. இப்படம் வரும் பிப்ரவரி மாதம் 19 தேதி ரிலீஸாகும் என்று நடிகர் விஷால் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

விஷால் நடிப்பில் எம்.எஸ்.ஆனந்தன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘சக்ரா’. ஸ்ரதா ஸ்ரீநாத், ரெஜினா கசாண்ட்ரா உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படம் திரையரங்குகளில் வெளியிடப்பட இருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் படத்தை ஓடிடி தளங்களுக்கு விற்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக முதலில் செய்திகள் வெளியானது.

Image

இதற்கான பேச்சுவார்த்தைக் கிட்டத்தட்ட முடிந்த நிலையில் இப்போது கடைசி நேரத்தில் சக்ரா திரைப்படத்தை திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய விஷால் அதிரடியாக முடிவெடுத்துள்ளார்.இதற்கு காரணம் தளபதி விஜய்யின் மாஸ்டர் படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகி ரூ.250 கோடி வசூலாகியுள்ள நிலையில் மற்ற நடிகர்களும் தங்கள் படங்களை திரையரங்கில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில், விஷாலின் சக்ரா படம் வரும் பிப்ரவரி 19-ம் தேதி இப்படம் வெளியாகவுள்ளதாக
நடிகர் விஷால் அதிகாரப்பூர்வமாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் இப்படத்தின் தமிழ் வெர்சனுக்கு யு/ஏ என்று சென்சார் சான்றிதழ் வழங்கியுள்ளதாகவும் தெலுங்கு வெர்சனுக்கு சென்சார் இனிமேல் வழங்கவுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

Most Popular

Recent Comments