Home News Kollywood மகிழ்ச்சி கடலில் மிதக்கும் மஞ்சிமா மோகன் !

மகிழ்ச்சி கடலில் மிதக்கும் மஞ்சிமா மோகன் !

நடிகை மஞ்சிமா மோகன் மலையாள சினிமாவில் அறிமுகமாகி, அங்கு அதிக படங்கள் நடித்திருந்தாலும், அவர் தமிழில் அறிமுகமாவதற்கு முன்பிருந்தே, இங்கு அவருக்கு பெரும் ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது. பக்கத்து வீட்டு பெண் போன்ற தோற்றத்துடன், அழகிய நடிப்பில் ரசிகர்களை கிரங்கடித்து வருகிறார். பிப்ரவரி 5 ஆம் தேதி வெளியான “களத்தில் சந்திப்போம்” படத்தில் அவரின் நடிப்பு பெரும் பாராட்டுக்களை குவித்து வருவதில் மகிழ்ச்சி கடலில் மிதந்து வருகிறார் மஞ்சிமா மோகன்.


இது குறித்து மஞ்சிமா மோகன் கூறியதாவது…
என்னிடம் களத்தில் சந்திப்போம் படத்தின் கதையை கூறியபோதே என் கதாப்பத்திரம் நன்றாக வருமென்கிற நம்பிக்கை இருந்தது. படப்பிடிப்பில் அந்த நம்பிக்கை பன்மடங்கு பெருகியது. தற்போது படத்திற்கும், எனது நடிப்பிற்கும் ரசிகர்களிடமிருந்து கிடைத்து வரும் பாராட்டுக்களும், வரவேற்பும் பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது. இந்நேரத்தில் என்னை இப்படத்திற்கு தேர்ந்தெடுத்ததற்காக தயாரிப்பாளர் RB.சௌத்திரி சார் அவர்களுக்கும், ஜீவா அவர்களுக்கும், இயக்குநர் N. ராஜசேகர் அவர்களுக்கும் பெரும் நன்றியினை தெரிவித்து கொள்கிறேன். என்னுடன் இப்படத்தில் பங்குகொண்ட நடிகர்கள் அருள்நிதி, பிரியா பவானி சங்கர், ரோபோ சங்கர், பால சரவணன் மற்றும் என் மீது அன்பாக இருந்த அனைத்து நடிகர்களுக்கும் எனது நன்றியினை தெரிவித்து கொள்கிறேன். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா அவர்களும் ஒளிப்பதிவாளர் அபிநந்தன் ராமானுஜம் அவர்களும் படத்தை மிகவும் மேம்பட்ட நிலைக்கு எடுத்து சென்று, மிக அழகான படமாக்கியுள்ளார்கள் அவர்களுக்கும் எனது நன்றிகள்.

மஞ்சிமா மோகன் தற்போது Zam Zam (Queen படத்தின் அதிகாரப்பூர்வ மலையாள ரீமேக்), விஷ்ணு விஷால் நடிக்கும் எஃப் ஐ ஆர், விஜய் சேதுபதி நடிக்கும் துக்ளக் தர்பார் படங்களில் நடித்து வருகிறார். அவர் ஒப்பந்தமாகியுள்ள மேலும் சில படங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளன.