V4UMEDIA
HomeNewsKollywoodபெண்களின் உடை குறித்து பேசிய தளபதி விஜய் ! வைரலாகும் மாஸ்டர் படத்தின் நீக்கப்பட்ட காட்சி

பெண்களின் உடை குறித்து பேசிய தளபதி விஜய் ! வைரலாகும் மாஸ்டர் படத்தின் நீக்கப்பட்ட காட்சி

தளபதி விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் கடந்த பொங்கல் தினத்தில் வெளியாகி தமிழ் சினிமாவில் மாபெரும் வசூல் சாதனை படைத்துள்ளது. மாஸ்டர் படம் வெளியாகி 25 நாட்கள் ஆனதை முன்னிட்டு அமேசான் பிரைம் சிறப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

5 நிமிட நீக்கப்பட்ட மாஸ்டர் படத்தின் இந்த காட்சியில் பெண்களின் உடை குறித்து குறை கூறும் ஒரு பெண்ணிற்கு தளபதி விஜய் பதில் கூறும் வசனம் உள்ள காட்சியாக உள்ளது. இந்த வசனத்தின் போது குற்றங்கள் அதிகமாக செய்பவருக்கு தண்டனை குறைவாக கொடுத்தால் குற்றங்கள் அதிகரித்துக் கொண்டே செல்லும் என்று விஜய் பேசும் பஞ்ச் வசனம் உள்ளது

இந்த வசனத்தை அடுத்து அந்த பெண் திருந்தி பெண்கள் குறித்த தனது தவறான அபிப்பிராயத்தை திருத்திக் கொள்வது போன்ற இந்த காட்சி உள்ளது.


Image


படத்தின் நீளம் காரணமாக நீக்கப்பட்ட இந்த காட்சியை அமேசான் ப்ரைம் வெளியிட்டுள்ள நிலையில் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. அனைத்து தரப்பு மக்களாலும் இந்த காட்சி பரட்டப்பட்டுள்ளது.

Most Popular

Recent Comments