டெல்லியில் விவசாயிகள் போராட்டம் தொடர்ந்து நடத்தி வரும் நிலையில், தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் வெற்றிமாறன் ஆதரவு தெரிவித்துள்ளர்.
டெல்லியில் நுழைய முடியாதபடி ஆணித்தடுப்பு மற்றும் தடுப்புச்சுவர்களும் வைக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்க்கட்சி உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து பிரபல பாடகி ரிஹானா, டெல்லியில் மனித உரிமை மீறல்… புதுடெல்லியில் இணையத்தொடர்ப்புகள் துண்டிக்கப்பட்டதா? நான் விவசாயிகளுக்கு ஆதரவாக நிற்கிறேன்… டெல்லி விவசாயிகள் போராட்டம் பற்றி ஏன் நாம் பேசவில்லை எனக் கேள்வி எழுப்பினார் !!!
இதற்குப் பதில் அளித்துள்ள தலைவி பட நாயகி கங்கனா, அவரை முட்டாள் என கூறியதுடன் மட்டுமின்றி அவர்கள் விவசாயிகள் அல்ல, நாட்டை தவறான பாதைக்கு துண்டா முயல்கிற தீவிராவதிகள் எனக் கூறியுள்ளார்.இவரது கருத்து பெரும் விவாதத்தைக் கிளப்பியதுடன் பெரும்சர்ச்சையை உருவாக்கியது.
2 மாதங்களாக டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருவது ரிஹானாவின் ட்வீட்மூலம் உலகம் முழுவதும் கவனம் பெற்றுள்ளது. அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் உறவினப் பெண் ஒருவர் இன்று இரண்டாவது நாளாக விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து டுவீட் பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில், இயக்குநர் வெற்றிமாறன் இதுகுறித்துக் கருத்துக் கூறியுள்ளார்.
அதில், “மக்களால் தான் அரசாங்கத்திற்கு அதிகாரம் வழங்கப்படுகிறது. அரசு மக்களின் நலனைத்தான் காக்க வேண்டுமே தவிர காப்பரேட் நிறுவனங்களை அல்ல. விவசாயிகள் தேசத்தின் நலன்களைக் காக்க முயற்சி செய்கிறார்கள். அவர்கள் உரிமைக்காகப் போராடுவதும் போராட்டத்தை ஆதரிப்பதும் ஜனநாயம் “என தெரிவித்துள்ளார்.