இந்திய கிரிக்கெட் வீரராக இருந்து இந்தியா கிரிக்கெட் அணியின் கேப்டனாக உயர்ந்தவர் விராட் கோலி. சச்சின், தோனிக்கு பின் உலகம் முழுவதும் அதிக கிரிக்கெட் ரசிகர்களை கவர்ந்தவர். இளம் பெண்களின் ஹேண்ட்சம் ஹீரோ. விளம்பர படங்களில் நடித்த வருடத்திற்கு பல நூறு கோடிகள் சம்பாதிக்கும் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையும் இவருக்கு உள்ளது. மாடல்கள், அழகிகள் என பலரும் போட்டி போட்டு முயன்றும், பாலிவுடின் முன்னணி நடிகை அனுஷ்கா சர்மாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
சுமார் மூன்று ஆண்டுகள் கழித்து அனுஷ்கா சர்மா இந்த கொரோனா லாக்டவுனில் கர்ப்பிணியானார்.
ஜனவரி 11 மதியம் விராட் கோலி & அனுஷ்கா ஷர்மா தம்பதிக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளதை மகிழ்ச்சியுடன் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார் விராட் கோலி.
இந்த நிலையில் இன்று மகளுக்கு வாமிகா (Vamika) என பெயரிட்டு மகிழ்ந்தனர். தற்போது மகள் பிறந்து முதன்முறையாக அவளுடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படத்தை அனுஷ்கா ஷர்மா தனது இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படம் இணையத்தளம் முழுக்க ட்ரெண்டிங் ஆகி வருகிறது.
இந்த புகைப்படத்திற்கு விராட் கோலி “என் மொத உலகமும் இந்த ஒற்றை புகைப்படத்தில்” என கமெண்ட் செய்துள்ள்ளார். ரசிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் , திரை பிரபலங்கள் என பலரும் தங்கள் வாழ்த்துக்களை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர்.