V4UMEDIA
HomeNewsKollywood8 நாட்கள் பிணமாக நடித்தேன் - "ஏலே" படம் குறித்து சமுத்திரக்கணி !!

8 நாட்கள் பிணமாக நடித்தேன் – “ஏலே” படம் குறித்து சமுத்திரக்கணி !!

இயக்குனர் ஹலிதா ஷமீம் இயக்கியுள்ள “ஏலே” திரைப்படத்தில் சமுத்திரக்கணி மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். உலகம் முழுவதும் இப்படம் பிப்ரவரி 12 வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர் படக்குழுவினர்.

இயக்குனர் ஹலிதா ஷமீம் பூவரசம் பீப்பி மற்றும் சில்லுக் கருப்பட்டி என மென்மையான ஹிட் படங்களுக்கு பிறகு இப்போது சமுத்திரக்கனி மற்றும் நடிகர் மணிகண்டன் முன்னணி நடிகர்களாக நடிக்க “ஏலே” திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

இந்த திரைப்படம் தந்தை மகன் பிணைப்பைப் பற்றிய படமாக உருவாகியுள்ளது. இந்த படத்தின் ஆடியோ ரிலீஸ் நேற்று சென்னையில் வெளியானது.

இந்த படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இயக்குனர் சமுத்திரக்கனி ‘இந்த படத்துக்காக 8 நாட்கள் பிணமாக மட்டுமே நடித்துள்ளேன். 8 நாட்கள் என்னை வெறுமனே கண்ணை மூடி படுக்க சொல்லி படமெடுத்தார்கள்’ என கூறியுள்ளார்.

Most Popular

Recent Comments