V4UMEDIA
HomeNewsKollywoodபா.ரஞ்சித் படத்தின் படப்பிடிப்பு முடிந்தது !!

பா.ரஞ்சித் படத்தின் படப்பிடிப்பு முடிந்தது !!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கபாலி மற்றும் காலா, அட்டகத்தி தினேஷ் நடித்த அட்டகத்தி, கார்த்தி நடித்த மெட்ராஸ் என சில திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் பா ரஞ்சித், தற்போது ஆர்யா நடித்து வரும் பெயரிடப்படாத திரைப்படத்தை இயக்கி வருகிறார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

இயக்குனராக மட்டுமின்றி தனது நீலம் புரடொக்சன்ஸ் நிறுவனத்தின் மூலம் சில தரமான திரைப்படங்களை தயாரித்து வருகிறார். இதுவரை பரியேறும் பெருமாள் மற்றும் இரண்டாம் உலக போரின் கடைசி குண்டு என இரண்டு தரமான படங்களை தயாரித்துள்ளார். தற்போது கலையரசன் நடிக்கும் ‘குதிரைவால்’ திரைப்படத்தை தயாரித்து வருகிறார்.

தற்போது தனது பேனரில் அடுத்த தயாரிக்கும் படத்தின் பெயரை வெளியிட்டுள்ளார் பா. ரஞ்சித். “ரைட்டர்” என பெயரிடப்பட்டிருக்கும் இந்த படத்தில், முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குநரும், பிரபல நடிகருமான சமுத்திரகனி நடிக்கிறார். லிட்டில் ரெட் கார் ப்லிம்ஸ் மற்றும் கோல்டன் ரேஷன் பிலிம்ஸ் உடன் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறார் பா.ரஞ்சித்.

இப்படத்தை எழுதி, இயக்குகிறார் ஃப்ராங்க்ளின் ஜேக்கப். ப்ரதீப் காளி ராஜா ஒளிப்பதிவில் கோவிந்த் வசந்தா இசையில், மணி படத்தொகுப்பில் படம் உருவாகவுள்ளது.இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு இனிதே முடிவடைந்துள்ளது. இது குறித்து ஒரு முக்கிய தகவலை சமுத்திரகனி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில்,

“என் அன்புத்தம்பி பா.ரஞ்சித் தயாரிப்பில், செல்லத் தம்பி பிராங்கிளின் இயக்கத்தில், குட்டித்தம்பி பிரதீப்
ஒளிப்பதிவில் நான் நடிக்கும் ” ரைட்டர்” எனும் திரைப்படத்தில் எனக்கான படப்பிடிப்பு பகுதி நிறைவடைந்தது. உடன் பணியாற்றிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றி…! வெல்வோம்…!” என பதிவிட்டுள்ளார்.

மேலும், பா, ரஞ்சித் இயக்கத்தில் தற்போது சர்ப்பேட்டா பரம்பரை என்ற படம் உருவாகியுள்ளது. இதில் ஆர்யா ஹீரோவாக நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

Most Popular

Recent Comments