இயக்குனர் மாரி செவ்ராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் அவர்கள் ‘கர்ணன்’ படத்தில் நடித்து வருகிறார். வி கிரேயஷன்ஸ் சார்பில் கலைப்புலி.எஸ்.தாணு அவர்கள் தயாரிக்கிறார். மேலும் காமெடி நடிகராக யோகி பாபு நடிக்கிறார். இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக ராஜிஷா விஜயன் நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் நட்டி நட்ராஜ் மற்றும் லால் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
தனுஷ் படமான ’கர்ணன்’ திரையரங்குகளில் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சற்றுமுன் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் ’கர்ணன்’ திரைப்படம் திரையரங்குகளில் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும் என அறிவித்துள்ளார். தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிகிறது.
இது மட்டுமின்றி இன்று காலை ‘கர்ணன்’ படத்தின் வெளியிட்டு அறிவிப்பை முன்னிட்டு வீடியோ மற்றும் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர். வீடியோ மற்றும் போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.