முன்னணி காமெடி நடிகராக வலம் வந்து தற்போது தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோவாக வலம் வருகிறார் நடிகர் சந்தானம்.
தமிழ் சினிமாவில் இளம் நடிகர் சந்தானம். இவாது நடிப்பில் பாரிஸ் ஜெயராஜ், சர்வர் சுந்தரம் என பல படங்கள் வரிசையாக ரிலீஸுக்கு தயார் நிலையில் உள்ளது.
இந்நிலையில் சந்தானத்தின் ரசிகர்களுக்கு உற்சாகமூட்டும் மற்றொரு செய்தி தற்போது வெளியாகிறது.ஏஜெண்ட் சாய் ஸ்ரீநிவாஸ் ஆத்ரேயா என்ற திரைப்படம் தமிழில் ரீமேக் ஆகவுள்ளது. இதில் சந்தானம் நடிக்கவுள்ளார்.
தெலுங்கில் நவீன், ஸ்ருதி சர்மா, ஸ்ரீதா ராஜகோபாலன் , நாம்நாத் விஸ்வநாத் போன்ற பலர் நடிப்பில் வெளியான படம் ஏஜெண்ட் சாய் ஸ்ரீநிவாஸ் ஆத்ரேயா. இப்படம் பெரிய வெற்றி பெற்றது. ஒடிடி- மூலம் பல மொழி ரசிகர்களும் விரும்பி பார்த்தனர்.2019ஆம் ஆண்டு வெளியான இப்படம் தர்போது தமிழில் சந்தானம் நடிப்பில் ரீமேக் ஆகவுள்ளது.
நவீன் நடித்த கேரக்டரில் சந்தானம் நடிக்கவுள்ளார். இப்படத்தை மனோஜ் பீடா இயக்கவுள்ளார். மேலும் இதில் ஹீரோயினாக ரியா சுமன் நடிகவுள்ளார் . விரைவில் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.