V4UMEDIA
HomeNews"சூப்பர் ஸ்டார்" மகேஷ் பாபுவின் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு !! மகிழ்ச்சியில் ரசிகர்கள்

“சூப்பர் ஸ்டார்” மகேஷ் பாபுவின் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு !! மகிழ்ச்சியில் ரசிகர்கள்

தெலுங்கு சினிமாவில் மெகா ஸ்டார் சிரஞ்சீவிக்கு இணையான ரசிகர்கள் பட்டாளத்தைக் கொண்டுள்ளவர் சூப்பர் ஸ்டார் நடிகர் மகேஷ்பாபு. தெலுங்கு மட்டுமின்றி தமிழகம் மற்றும் உலகம் முழுவதும் வெறித்தனமான ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார்.

இவரை தெலுங்குசினிமாவின் “பிரின்ஸ்” என்று செல்லமாக அழைக்கின்றனர் ரசிகர்கள். இவரது ஒவ்வொரு படமும் வசூலை வாரிக்குவிப்பதால் இவர் வசூல் சக்கரவர்த்தி என்று அழைக்கப்படுகிறார்.இவர் தற்போது ’’சர்காரு வாரி பாட்டா’என்ற பிரம்மாண்ட அதிரடி ஆக்சன் படத்தில் நடித்து வருகிறார். இப்படம் எப்போது ரிலீஸாகும் என அவரது ரசிகர்கள் காத்திருக்கு நிலையில் இன்று (ஜனவரி 29) இப்படத்தைக் குறித்த முக்கிய அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

Image

’’சர்காரு வாரி பாட்டா’படம் அடுத்தாண்டு(2022) சங்கராந்தி அன்று தியேட்டரில் ரிலீசாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் மகிழ்ச்சியில் இந்த செய்தியை கொண்டாடி வருகின்றனர்.

Most Popular

Recent Comments