
Review By :- v4u media
Release Date :- 28/01/2021
Movie Run Time :- 2.15 Hrs
Censor certificate :- U/A
Production :- Creative Entertainers and Distributors
Director :- Pradeep Krishnamoorthy
Music Director :- Simon K. King
Cast :- Sibi Sathyaraj ,Nandita Swetha,Nassar,Jayaprakash,Suman Ranganathan,Pradeep Krishnamoorthy,J. Satish Kumar
கன்னட திரையுலகில் 2019-ஆம் ஆண்டு வெளியான படம் ‘கவலுதாரி’. இந்த படத்தை இயக்குநர் ஹேமந்த் ராவ் இயக்கியிருந்தார். இதில் ரிஷி, ஆனந்த் நாக், அச்யுத் குமார், சுமன் ரங்கநாதன், ரோஷினி பிரகாஷ், அவினாஷ் மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்த படம் கன்னடத்தில் மிகப்பெரிய மெகா ஹிட்டானது. ஓடிடி வாயிலாக மற்ற மொழி ரசிகர்களும் படத்தை ரசித்து பார்த்தனர்.
இதனைத் தொடர்ந்து இப்படத்தின் தமிழ் ரீமேக் ரைட்ஸை தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் தனஞ்செயன் கைப்பற்றினார். இதில் ஹீரோவாக சிபிராஜ் நடித்துள்ளார்.
சிபிக்கு ஜோடியாக நந்திதா தாஸ் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே சிபிராஜை வைத்து “சத்யா” என்ற சூப்பர்ஹிட் படத்தை தந்துள்ளார்.
போக்குவரத்து காவல் அதிகாரியாக பணிபுரியும் சிபி சத்யராஜுக்கு குற்ற வழக்குகளைப் பற்றிய விசாரிக்க ஆர்வம் உள்ளது. ஆனால் அதற்கு அவரது உயர் அதிகாரிகள் உன் வேலையை மட்டும் பார் என கூறுகிறார்கள். அவர் வேலை செய்யும் இடத்திலுள்ள பாலத்திற்கு அடியில் கிடைக்கும் மண்டை ஓட்டை வைத்து காவல்துறை விசாரிக்க முடிவெடுக்கிறது. ஆனால், அதற்கு முன் சிபி சத்யராஜ் அந்த மண்டை ஓட்டுடன் கிடைத்த மற்ற இரண்டும் ஒரே குடும்பத்தைச் சார்ந்தது போல் இருக்கிறது மற்றும் அவர்கள் இறந்து 30 ஆண்டுகள் ஆகிறது என்று தெரிய வருகிறது.
இறுதியில் அவர் இறந்தது கொலையா? விபத்தா? என்பதை கண்டுபிடித்தாரா என்பதே படத்தின் கதை.
படம் முழுக்க விரைப்பான தோற்றத்திலேயே இருக்கிறார் சிபிராஜ். தனக்கு கொடுக்கப்பட்ட வேலயை மிகச்சரியாக செய்துள்ளார்.
நந்திதா பெயருக்கு கதாநாயகியாக வந்து போகிறார். ஜேபி, சுமன் ரங்கநாதன், சாய் தீனா, நாசர், சம்பத் மைத்ரேயா சிறப்பாக நடித்துள்ளனர். இசையமைப்பாளர் சைமன் கிங் பின்னணி இசை படத்தின் மிகப்பெரிய பலம் என்றே சொல்லலாம்.
கபடதாரி – சிறப்பு