Home News Kollywood மாஸ்டர்’ படம் சிறப்பாக வர காரணம் விஜய் தான் – விஜய் சேதுபதி பேட்டி..!

மாஸ்டர்’ படம் சிறப்பாக வர காரணம் விஜய் தான் – விஜய் சேதுபதி பேட்டி..!

சென்னை நாவலூரில் கார் கேர் நிறுவனத்தை திறந்து வைத்த  நடிகர் விஜய் சேதுபதி..!

‘மாஸ்டர்’ படம் சிறப்பாக வர காரணம் விஜய் தான் – விஜய் சேதுபதி!
டிவி நிகழ்ச்சி தொகுப்பாளராக இருக்கும் ரோகிணி கோடிட்ட இடங்களை நிரப்புக, எல் கே ஜி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் சென்னை நாவலூரில் புதியதாக தொடங்கியுள்ள ‘3சி’ எனும் கார் கேர் நிறுவனத்தை நடிகர் விஜய் சேதுபதி திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விஜய் சேதுபதி, “மாஸ்டர் படம் மூலம் மக்கள் மீண்டும்  திரையரங்குகளுக்கு வந்திருக்கிறார்கள். விஜய், லோகேஷ் கனகராஜ் , தயாரிப்பாளர் லலித் குமார் மற்றும் மக்களுக்கு ரொம்ப நன்றி” என்றார்.

‘800’ படத்தை பற்றிய செய்தியாளரின்  கேள்விக்கு “800 பட பிரச்சினை முடிந்துவிட்டது . அதை மீண்டும் கிளப்பாதீர்கள்” என்றார் .’மாஸ்டர்’ என்றாலே விஜய் சேதுபதி படம் என்று ஒரு சிலர் கூறுகிறார்களே என்ற கேள்விக்கு “இந்த கேள்வியே அவசியமில்லாது . விஜய்யால் மட்டும் தான் அந்தப் படம் சிறப்பாக வந்திருக்கிறது” என்றார்.