V4UMEDIA
HomeNewsKollywoodஇயக்குனர் தேசிங் பெரியசாமியை மணமுடிக்கும் பிரபல இயக்குனரின் மகள் !!

இயக்குனர் தேசிங் பெரியசாமியை மணமுடிக்கும் பிரபல இயக்குனரின் மகள் !!

துல்கர் சல்மான், ரக்சன், ரிதுவர்மா மற்றும் நிரஞ்சனி அகத்தியன் உள்ளிட்ட பலரது நடிப்பில் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவான படம் ’கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால். இந்த திரைப்படம் 2020ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அது மட்டுமில்லாமல் விமர்சன ரீதியாகவும் திரைப் பிரபலங்கள் பலரால் பாராட்டப்பட்டது. குறிப்பாக நமது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் படத்தை பார்த்து விட்டு இயக்குனருக்கு போன் செய்து பாராட்டியது மட்டுமின்றி எனக்கு கதை ரெடி செயங்க என கூறியது நாம் அனைவரும் அறிந்ததே.


Image


இந்த படம் வெளியான ஒரு சில வாரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் உடனே ஓடிடி தளத்திலும் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் தனது அடுத்த படத்துக்கான வேலைகளில் ஈடுபட்டு வரும் தேசிங் பெரியசாமி, இப்போது தன் படத்தில் நடித்த நிரஞ்சனி அகத்தியனை திருமணம் செய்ய உள்ளாராம்.

நிரஞ்சனி தேசிய விருது பெற்ற பிரபல இயக்குனர் அகத்தியனின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

Most Popular

Recent Comments