டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் விஐபி’ 4 புத்தம் புதிய நிகழ்ச்சிகளின் முதல் போஸ்டர்களை சில மாதங்களுக்கு முன் வெளியிட்டது. பிரபல இயக்குனர்-தயாரிப்பாளர் வெங்கட் பிரபு மற்றும் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் காஜல் அகர்வால், தமன்னா, சத்யராஜ் மற்றும் பலர் நடித்துள்ளர் .
லைவ் டெலிகாஸ்ட் : (ஹாரர்) காஜல் அகர்வால் , வைபவ், ஆனந்தி இயக்கம் : வெங்கட் பிரபு
பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு; லைவ் டெலிகாஸ்டுடன் தனது டிஜிட்டல் துறை இயக்கத்தை அறிமுகம் செய்துள்ளார். “ஒரு நல்ல சினிமாவை ஒன்றாக இணைப்பதை விட நிகழ்ச்சிகளை உருவாக்குவது எளிதானது என்று பெரும்பாலும் மக்கள் கருதுகிறார்கள், ஆனால் இது முற்றிலும் நேர்மாறானது. ஆம், நான் எனது கம்ப்ர்ட் zone நில் இருந்து வெளிவந்து முற்றிலும் புதிய மற்றும் சவாலான ஒன்றை முயற்சித்துள்ளேன் . புதிய மற்றும் அற்புதமான கதைகளத்துடன், தனித்துவமான கருத்துடன் ஒரு நிகழ்ச்சியை வழங்கப் போகிறேன், அங்கு பரிச்சயம் அல்லாத பார்வையாளரும் கூட நிகழ்ச்சியுடன் ஈடுபடத் தொடங்குவார். லைவ் டெலிகாஸ்ட் என்பது ஒரு ஹாரர் அனுபவத்தை அனைவருக்கும் மெய்சிலிர்ப்பூட்டும் வகையில் வழங்கும். ஒரு திகில் அனுபவத்தை உணர்வீர்கள். மேலும் இந்த நிகழ்ச்சி மற்ற 6 மொழிகளிலும் வெளியிடப்படும் மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் விஐபி மூலம் இந்த கதை நாடு முழுவதும் மில்லியன் கணக்கான பார்வையாளர்களை சென்றடையும் என்று நான் நம்புகிறேன் ”
இந்த தொடரின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்த நிலையில் தற்போது இந்த தொடர் பிப்ரவரி 12ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.திருமணத்திற்குப் பின் காஜல் அகர்வாலின் முதல் திரைப்படம் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.