தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரம் ரஜினிகாந்த். அவருக்கு தமிழகம் மட்டுமின்றி உலகெங்கும் பல கோடி ரசிகர்கள் உள்ளனர்.
அவர் தற்போது, அண்ணாத்த படத்தில் சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார். அவருடன் கீர்த்தி சுரேஷ், மீனா உள்ளிட்ட நடிகைகளும் நடித்து வந்த நிலையில் கொரோனா கால ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால் படப்பிடிப்பு மீண்டும் துவங்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.’அண்ணாத்த’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் ஹைதெராபாத்தில் நடந்த போது படக்குழுவினர் 4 பேருக்கு திடீரென கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதால் இந்த படத்தின் படப்பிடிப்பு அவசர அவசரமாக நிறுத்தப்பட்டது.
மீண்டும் இப்படத்தின் படப்பிடிப்பு தேர்தலுக்கு பின்னர் தான் தொடங்கும் என்று படக்குழுவினர் வட்டாரங்களிலிருந்து தகவல் வெளிவந்துள்ளது.இந்த நிலையில் தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் ’அண்ணாத்த’ திரைப்படம் வரும் நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி தினத்தில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அது தற்போது வைரலாகி வருகிறது.