நரமாமிசம் உண்ணும் காட்டுவாசி குழுவை மையமாக வைத்த தமிழில் முதல் முறையாக உருவாகும் கமெற்சியால் படம் “ட்ரிப்”. பிப்ரவரி 5, 2021 அன்று உலகளவில் திரையரங்கில் வெளியாகவுள்ளது.
“ட்ரிப்” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று (ஜனவரி 24) நடைபெற்றது. அப்போது படத்தின் தமிழக விநியோகஸ்தர் சக்தி ஃபிலிம் பேக்டரி சக்திவேலன் அவர்கள் கூறியதாவது :
திரையுலக நணபர்கள் பணியாளர்கள் அனைவருக்கும் ஊடக நண்பர்களோடான உரையாடல், மற்றும் சந்திப்பை நிகழ்த்த முடியாமல் இருப்பது பெரும் வருத்தமிக்க விசயம்.
நடிகர் தளபதி விஜய்யின் “மாஸ்டர்” திரைப்படம் பெரும் தடைகளை முறியடித்து சாதனை படைத்துள்ளது. பொது முடக்க காலத்தில் யாரும் இனி திரையரங்கிற்கு வரமாட்டார்கள் என்கிற மாயையை “மாஸ்டர்” படம் உடைத்திருக்கிறது. ரசிகர்கள் கொண்டாட்டத்துடன் திரையரங்கில் படத்தை ரசிப்பது பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது. ‘மாஸ்டர்’ படத்தால் ஓடிடியில் வெளியிட திட்டமிடப்பட்டிருந்த பல படங்கள் தற்போது பின்வாங்கிட்டன. தளபதி விஜய் அவர்கள் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படத்தை பார்க்க மக்கள் அலைகடல் போல திரையரங்கு நோக்கி வருகின்றனர். இதுவரை சாதனை படைத்த அனைத்து விஜய் படங்களின் வசூலையும் மாஸ்டர் வெறும் 11 நாட்களில் முறியடித்துள்ளது.
சினிமா மீது பெரும் அர்ப்பணிப்பும் காதலும் கொண்ட இப்படத்தின் தயாரிப்பாளர்களுக்கு பெரும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். புதிய வரவுகளை கொண்டு உருவாகும் இப்படத்தின் மீது பெரும் நம்பிக்கையுடன் பெரிய பட்ஜெட்டில் இப்படத்தை எடுத்துள்ளார்கள். யோகிபாபுவை வைத்து இயல்பாக எடுக்கப்படும் பட்ஜெட்டை விட பெரிய பட்ஜெட்டில் இப்படத்தை எடுத்துள்ளார்கள். இப்படத்தில் கண்டிப்பாக நல்ல லாபத்தை அடைவார்கள். பெரும் நம்பிக்கையுடன் இப்படத்தை தயாரித்ததற்கு அவர்களுக்கு வாழ்த்துக்கள். யோகிபாபு, கருணாகரன் முதல் படத்தில் நடித்துள்ள அனைவரும் படத்தை மிகச்சிறப்பான படமாக மாற்றியுள்ளனர். இப்படம் கண்டிப்பாக கமர்ஷியலாக பெரும் வெற்றி பெரும் இப்படத்தில் நானும் பங்கு கொண்டதில் மகிழ்ச்சி.