கொரோனா காலத்தில் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் நடிகர் சத்யராஜை வைத்து எடுக்கவிருந்த படம் நிறுத்தப்பட்டுள்ளதாக திருப்பூர் சுப்ரமணியன் அறிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் காரணமாக கடந்த ஆண்டு 9 மாதங்கள் திரையரங்குகள் மூடப்பட்டன.
இதனால் எந்த படமும் ரிலீஸ் செய்யமுடியாமல் திரையரங்குகள் முடங்கின. தயாரிப்பாளர்களும், விநியோஸ்தர்களும், திரையரங்கு உரிமையாளர்களும் கடும் நஷ்டத்தை சந்தித்தன.
இந்த நஷ்டத்தை சரிசெய்ய ஒரு படத்தை எடுத்து அதன்மூலம் வரும் வருமானத்தை வைத்து 200 பங்குகளாக பிரித்து கொள்ளலாம் என முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து சதவீத அடிப்படையில் சம்பளம் என்ற முறையில் கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் சத்யராஜை வைத்து ஒரு படம் எடுக்கவேண்டும் என தயாரிப்பாளர்கள், விநியோகிஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.இந்த முக்கிய கேரக்டர்களில் விஜய் சேதுபதி, பார்த்திபன் ஆகியோரை நடிக்கவும் பேசி முடிக்கப்பட்டது. ஆனால் கொரானா அச்சுறுத்தல் பெரும் அளவில் இல்லை என்பதால் இந்த படத்தை கைவிடுவதாக திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதையடுத்து தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் ஆகியோர்களிடம் பேசி ஒருமித்த முடிவு எடுக்கப்பட்ட பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக திருப்பூர் சுப்ரமணியன் அறிவித்துள்ளார்.