பிரபல இளம் நடிகர் விஷ்ணு விஷாலின் தொல்லை தாங்க முடியாமல் அவசர போலீசுக்கு போன் போட்டு தங்களை பாதுகாத்துக்கொள்கிறார்கள் அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்.
வெண்ணிலா கபடி குழு, ஜீவா, ராட்சசன் என்று நடித்து பிரபல நடிகர் ஆகிவிட்டார். இவர் மீதும் இவர் தந்தை மீதும் அண்மையில் நடிகர் சூரி பண மோசடி வழக்கு தொடர்ந்திருந்தார். அது தொடர்பான வழக்கு நடந்து வருகிறது.
இந்நிலையில் விஷ்ணு விஷாலுடன் அடுக்கு மாடி குடியிருப்பில் வசிக்கும் குடித்தன வாசிகள் அனைவரும் திரண்டு சென்று சென்னை காவல்துறை கூடுதல் ஆணையரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.
அடுக்குமாடி குடியிருப்பின் செகரட்டரி ஆணையரிடம் தந்திருக்கும் புகாரில், ‘’விஷ்ணு விஷால் வசிக்கும் பிளாட்டில் இருந்து இன்று அதிகாலையில் இசைச்சத்தம் அதிகமாக வந்தது. அந்த தளத்திலும் அதற்கு மேலும் கீழும் உள்ள தளத்தில் உள்ள வீடுகளில் முதியவர்களும், இதய நோய் உள்ளவர்களும் இருக்கிறார்கள். இதனால் பயந்துபோய் 100க்குபோன் செய்தோம். அவசர போலீசார் வந்து விஷாலின் கதவை தட்டியதும், குடிபோதையில் எழுந்து வந்தவர், கண்டபடி திட்டிவிட்டு மீண்டும் வீட்டுக்குள் சென்றுவிட்டார். அடிக்கடி இப்படி நடக்கிறது’’ என்று கூறியுள்ளனர்.
புகாரின் மீது நடவடிக்கை எடுக்கப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்திருக்கிறார்கள்.விஷ்ணு விஷாலின் தந்தை முன்னாள் காவல்துறை அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.
நான் சிக்ஸ்பேக் வைத்திருப்பதால் குடிப்பதில்லை- விஷ்ணுவிஷால்
இந்நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள நடிகர் விஷ்ணு விஷால், “நான் படப்பிடிப்பிற்காக சிக்ஸ்பேக் வைத்திருப்பதால் இரண்டு மாதங்களுக்கு மேலாக குடிக்கவில்லை. நான் இந்த அடுக்குமாடி குடியிருப்பிற்கு வந்து இரண்டு மாதங்கள் மட்டுமே ஆகிஉள்ளது. வேறு சில காரணத்தினால் பொய்யான குற்றச்சாட்டை தன் மீது சுமத்தி இருக்கின்றனர்” என தெரிவித்துள்ளார்.