சென்னை பெசன்ட் நகர் 19-வது குறுக்குத்தெருவில் வசித்து வந்தவர் ஸ்ரீராம் (60). இவர் சில்லுக்கருப்பட்டி படத்தில் நடித்துள்ளார். மேலும் கிராவ் மாகா என்ற இஸ்ரேல் தற்காப்புக் கலையை அறிமுகப்படுத்தியவர். 2-வது மாடியில் வசித்து வந்த அவர் திடீரென தவறி விழுந்தார். படுகாயத்துடன் கிடந்த ஸ்ரீராம்மை அவரது குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் போகும் வழியிலேயே அவர் இறந்து போனார். ஸ்ரீராமின் உடல் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீராம் கிராவ் மாகா என்ற தற்காப்பு தற்காப்புக் கலையை இஸ்ரேலில் கற்று பல்வேறு மாநிலங்களுக்கு சென்று பிரபலப்படுத்தினார். ஐ.பி.எஸ் அதிகாரிகள் மற்றும் பிரபலங்களுக்கும் இந்த பயிற்சியை அளித்துள்ளார். “சில்லுக்கருப்பட்டி” படத்தில் குறிப்பிடத்தக்க பாத்திரத்தில் நடித்தார் என்பது குறிப்பிடதக்கது. இந்த சம்பவம் தொடர்பாக சாஸ்திரி நகர் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.