லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள படம் மாஸ்டர். இப்படத்தின் கதாநாயகியாக மாளவிகா மோகன் நடிக்கிறார். மேலும் விஜய் சேதுபதி வில்லனாகவும், சாந்தனு, அர்ஜுன் தாஸ், சஞ்சீவ், ஸ்ரீமன், ஆண்ட்ரியா, கௌரி கிஷன், விஜய் டிவி தீனா, லல்லு, பிரேம் மற்றும் யூ-டியூப் ஸ்டார்ஸ் என பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ளார். சேவியர் பிரிட்டோ மற்றும் லலித் குமார் இணைந்து பெரும் பொருட்செலவில் இப்படத்தை தயாரித்துள்ளனர். கொரோனா தொற்று கட்டுப்பாட்டுக்கு வந்த பிறகு இப்படத்தின் ரிலீஸ் தமிழர் திருநாளான பொங்கலை முன்னிட்டு நேற்று (ஜனவரி 13) உலகம் முழுவதும் உள்ள திரையரங்கில் மிக பிரமாண்டமான முறையில் வெளியாகி வெற்றிநடை போடுகிறது.
ஆக்சன் காட்சிக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளதால் மாஸ்டர் படத்தில் ஏகப்பட்ட சண்டை காட்சிகள் உள்ளன. பஸ் பைட், மெட்ரோ ட்ரெயின் பைட், பார் பைட், கல்லூரியில் நடக்கும் பைட், ரையின் பைட், ஓப்பனிங் பைட், படத்தின் இறுதி பைட், கபடி பைட் என அனைத்து ஆக்ஷன் காட்சிகளும் செம்மையாக உள்ளன.
படம் மாபெரும் வசூல் சாதனை படைத்துள்ளது. தமிழகத்தில் மட்டுமே 100 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. ஆந்திராவில் போட்ட முதலீட்டை எடுத்து லாபம் கிடைத்துள்ளது. இது மிகப்பெரிய சாதனை ஆகும். ஆந்திராவில் அதாவது தெலுங்கில் மாஸ்டர் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. இதனால் படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் ஆகியோர் வரை நல்ல லாபம் பார்த்துள்ளனர். இந்த படத்தை வாங்கிய மகேஷ் கொனேரு தளபதி விஜய்யை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்துள்ளார்.