தனது அயராத உழைப்பால் இன்று இந்தியாவின் முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார் நடிகர் சோனு சூட். அருந்ததி, நெஞ்சினிலே, கள்ளழகர், மஜ்னு, ஆத்தாடு, தப்பாங், ஒஸ்தி, ஆகாடு, தேவி என தமிழ், தெலுங்கு, ஹிந்தி உட்பட பல மொழிகளில் வில்லனாக நடித்த பிரபல நடிகர் சோனு சூட். கொரோனா வைரஸால் நிலவும் ஊரடங்கில் உணவு மற்றும் சொந்த ஊர் செல்ல முடியாமல் தவிக்கும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களை மும்பையிலிருந்து கர்நாடகா செல்ல தனது சொந்த செலவில் பஸ் வசதி செய்து கொடுத்தது நாம் அனைவரும் அறிந்ததே. சமீபத்தில் கூட மூன்று ஆதரவற்ற குழந்தைகளை என் பொறுப்பில் வளர்வார்கள் என கூறினார்.
கொரோனா ஊரடங்கு நேரத்தில் மாணவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் முன் வந்து பல உதவிகளை செய்து வந்தார். இது மட்டுமின்றி டுவிட்டர் மூலமாக உதவி கேட்கும் பலருக்கு கொஞ்சம் கூட முகம் சுளிக்காமல் உதவி செய்து வருகிறார். மகள்களை வைத்து ஏர் பூட்டிய விவசாயிக்கு டிராக்டர், சாப்ட்வேர் இன்ஜினியர் வேலை பறி போய் விட்டதால் காய்கறி விற்பனை செய்த இளம்பெண்ணுக்கு சாப்ட்வேர் பணி என கணக்கில் இடமுடியாத அளவிற்கு அதிகமாக உதவி செய்துள்ளார்.
இந்நிலையில் சோனு சூட் புதிதாக ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கியுள்ளார். இந்த ஆம்புலன்ஸ் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் உள்ள நோயாளிகளுக்கு உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இதனால் மக்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்து சோனுவுக்கு மனதார நன்றி தெரிவித்து வருகின்றனர்.
சமீபத்தில் சோனு சூட் ஒரு கர்ப்பிணிப் பெண்ணுக்கு உதவி செய்தார். நன்றி தெரிவிக்கும் வகையில், அப்பெண் தனது குழந்தைக்கு சோனுவின் பெயரை சூட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சபாஷ் !!!