சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கபாலி மற்றும் காலா, அட்டகத்தி தினேஷ் நடித்த அட்டகத்தி, கார்த்தி நடித்த மெட்ராஸ் என சில திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் பா ரஞ்சித், தற்போது ஆர்யா நடித்து வரும் “சார்பட்டா” திரைப்படத்தை இயக்கி வருகிறார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.
இயக்குனராக மட்டுமின்றி தனது நீலம் புரடொக்சன்ஸ் நிறுவனத்தின் மூலம் சில தரமான திரைப்படங்களை தயாரித்து வருகிறார். இதுவரை பரியேறும் பெருமாள் மற்றும் இரண்டாம் உலக போரின் கடைசி குண்டு என இரண்டு படங்களை தயாரித்துள்ளார். தற்போது கலையரசன் நடிக்கும் ‘குதிரைவால்’ திரைப்படத்தை தயாரித்து வருகிறார்.
இந்த நிலையில் இன்று (ஜனவரி 21) பா.ரஞ்சித் தயாரிப்பில் நடிகர் யோகிபாபு ஹீரோவாக நடிக்கும் படத்தின் தலைப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
இப்படத்திற்கு “பொம்மை நாயகி” எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை அறிமுக இயக்குநர் ஷாம் இயக்கவுள்ளார். சுந்தரமூர்த்தி இசையமைக்கிறார். மேலும் இப்படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.