“தாதா 87” வெற்றிப்படத்தைத் தொடர்ந்து இயக்குனர் ‘விஜய் ஸ்ரீ ஜி’, ஜிமீடியா தயாரிப்பில் “பொல்லாத உலகில் பயங்கர கேம்” (பப்ஜி) என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் மூலம் நடிகர் விக்ரமின் தங்கை அனிதாவின் மகன் அர்ஜூமன் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். ‘பிக் பாஸ்’ புகழ் ஐஸ்வர்யா தத்தா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் அனித்ராநாயர், ஆராத்யா, சாண்ட்ரியா, நாடோடிகள் சாந்தினி, மொட்டை ராஜேந்திரன், மைம் கோபி, பிக்பாஸ் ஜூலி, ஆகியோரும் நடிக்கின்றனர்.
படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வரும் நிலையில் தற்போது “பவுடர்” என்ற புதிய படத்தை இன்று துவங்கியுள்ளார் இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி.
வித்யா பிரதீப் முதன்மை வேடத்தில் நடிக்க மனோபலா, வையாபுரி ,ஆதவன் ஆகல்யா வெங்கடேசன், ஆகியோருடன் பல அறிமுக நாயக நாயகியர்களும் நடிக்கிறார்கள். த்ரில்லர் கலந்த பிளாக் காமெடியாக படமாக தயாராகிறது. தமிழ் சினிமாவின் முன்னணி பி.ஆர்.ஓ வான நிகில் முருகன் அவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
படத்தின் ஒளிப்பதிவாளர் RP (ராஜா பாண்டி) . இவர் தாதா 87 படத்தின் முலம் அறிமுகம் ஆகி
பலரது கவனத்தையும் ஈர்த்தவர். இப்படத்தின் பெரும்பாலான காட்சிகளின் படப்பிடிப்பு சென்னை மற்றும் ஹைத்ராபாத்தில் நடைபெறும் .
இந்நிலையில் இப்படத்தின் டீசரை வரும் ஜனவரி 26 அன்று தென்னிந்திய சினிமாவே திரும்பி பார்க்கும் வகையில் 4 மொழிகளிலும் மிகப்பெரிய நடிகர்கள் வெளியிடுகிறார்கள். ரசிகர்கள் இப்போதே மிகவும் ஆவலுடன் காத்து இருக்கின்றனர்.
தமிழ் – ஏ. ஆர்.ரஹ்மான்
மலையாளம் – மம்முட்டி , ரசூல் பூக்குட்டி
கன்னடம் – சிவராஜ் குமார்
தெலுங்கு – ராணா