முன்னணி காமெடி நடிகராக வலம் வந்து தற்போது தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோவாக வலம் வருகிறார் நடிகர் சந்தானம்.
இன்று (ஜனவரி 21) அவர் தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவர் நடித்து வரும் திரைப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது
சந்தானம் நடித்து வரும் பாரீஸ் ஜெயராஜ் என்ற திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அவர் நடித்து வரும் மற்றொரு படத்திற்கு சபாபதி என்ற டைட்டில் அறிவிக்கப்பட்டு பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி உள்ளது
மேலும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் உடன் வெளிவந்துள்ள இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.