V4UMEDIA
HomeNewsKollywoodபட்டாசு வெடிச்சு, மேளம் அடிச்சு, கேக் வெட்டி கொண்டாடிய ரம்யா பாண்டியன் !!!

பட்டாசு வெடிச்சு, மேளம் அடிச்சு, கேக் வெட்டி கொண்டாடிய ரம்யா பாண்டியன் !!!

இயக்குனர் ராஜு முருகனின் “ஜோக்கர்” திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானாவர் ரம்யா பாண்டியன். அதன்பின் போதிய வாய்ப்புகள் இல்லாத நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு மொட்டை மாடியில் சேலையில் எடுத்த கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் மிக வைரலானது.

அதில் ரசிகர்கள் கிறங்கி போக அதை கவனித்த விஜய் டிவி தங்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அவரை தூக்கி போட்டு விஜய் டிவியின் செட் பிராப்பர்ட்டியாக்கியது.

இதையடுத்து அவர் இப்போது பிக்பாஸ் சீசன் 4 ல் போட்டியாளராக கலந்துகொண்டார். இவர் நடிகர் அருண் பாண்டியன் அண்ணன் மகள் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பைனல் வரை சென்ற ஒரே பெண் போட்டியாளர் என்ற பெருமையை பெற்ற ரம்யா பாண்டியன் இன்ஸ்டாவில் நேற்று ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.


அதில் பிக்பாஸில் இருந்து கடைசி சுற்றில் வெளியேறிய ரம்யா பாண்டியன் க்கு அவரது குடும்பத்தினர் மேள தாளத்துடன் பட்டாசு வெடித்து கேக் வெட்டி வரவேற்றுயுள்ளனர்.இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மிக வைரலாகி வருகிறது 🤩😍🔥❤️

Most Popular

Recent Comments