HomeNewsKollywoodஎனது அப்பா விரைவில் மக்களை சந்திப்பார் - ஸ்ருதிஹாசன் & அக்ஷரஹான் அறிக்கை !!

எனது அப்பா விரைவில் மக்களை சந்திப்பார் – ஸ்ருதிஹாசன் & அக்ஷரஹான் அறிக்கை !!

உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் தான் அறுவை சிகிச்சை செய்து கொள்ளப் போவதாகவும் இதனால் தற்காலிகமாக தேர்தல் பிரச்சாரத்திலிருந்து சில நாட்கள் ஓய்வு எடுத்துக் கொள்வதாகவும் சமீபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

அதன்படி இன்று (ஜனவரி 19) கமல்ஹாசன் அவர்களுக்கு சர்ஜரி நடந்ததாகவும் அவர் தற்போது நலமாக இருப்பதாகவும் கமல்ஹாசனின் மகள்கள் அக்ஷரா ஹாசன் மற்றும் சுருதிஹாசன் ஆகிய இருவரும் இணைந்து அறிக்கை ஒன்றை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். இந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது :

“இன்று காலையில் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் மருத்துவர் ஜே.எஸ்.என். மூர்த்தி அவர்களது ஒருங்கனைப்பில் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் மோகன் குமார் தலைமையில் எங்கள் அப்பாவிற்கு காலில் சர்ஜரி வெற்றிகரமாக நடந்து முடிந்தது.

அப்பா நலமாக உற்சாகத்துடன் இருக்கிறார். அப்பாவை மருத்துவர்களும், மருத்துவமனை நிர்வாகமும் மிக சிறந்த முறையில் பார்த்துக்கொள்கிறார்கள். நான்கைந்து நாட்கள் ஓய்வுக்கு பின் அப்பா வீடு திரும்புவார். சில நாட்கள் ஓய்வுக்குப் பின் மீண்டும் மக்களை சந்திப்பார், மகிழ்விப்பார். அனைவரது அன்பிற்கும் பிரார்த்தனைக்கும் எங்களது நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்” .

இந்த அறிக்கை ஸ்ருதிஹாசன் மற்றும் அக்சராஹாசன் ஆகியோர்களின் டுவிட்டர் பக்கங்களில் பதிவு செய்துள்ளனர்.

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments