லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள படம் மாஸ்டர். இப்படத்தின் கதாநாயகியாக மாளவிகா மோகன் நடிக்கிறார். மேலும் விஜய் சேதுபதி வில்லனாகவும், சாந்தனு, அர்ஜுன் தாஸ், சஞ்சீவ், ஸ்ரீமன், ஆண்ட்ரியா, கௌரி கிஷன், பிரேம் மற்றும் யூ-டியூப் ஸ்டார்ஸ் என பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ளார். சேவியர் பிரிட்டோ மற்றும் லலித் குமார் இணைந்து பெரும் பொருட்செலவில் இப்படத்தை தயாரித்துள்ளனர். கொரோனா தொற்று கட்டுப்பாட்டுக்கு வந்த பிறகு இப்படத்தின் ரிலீஸ் தமிழர் திருநாளான பொங்கலை முன்னிட்டு நேற்று (ஜனவரி 13) உலகம் முழுவதும் உள்ள திரையரங்கில் மிக பிரமாண்டமான முறையில் வெளியாகியுள்ளது. படத்தை எதிர்பார்த்து ஒட்டுமொத்த ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்து திரையரங்கில் பார்க்கின்றனர்.
படத்தின் இறுதி காட்சியில் தளபதி விஜய் சட்டையின்றி வெறும் உடம்புடன் நின்று, விஜய் சேதுபதியை அடிப்பது போன்று காட்சி இடம்பெற்றுள்ளது. 43 வயது தாண்டியும் உடம்பை இவ்வளவு இளமையாக பார்த்து கொள்வது மிகவும் கடினம் தான். ஆக்சன் காட்சிக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளதால் மாஸ்டர் படத்தில் ஏகப்பட்ட சண்டை காட்சிகள் உள்ளன. பஸ் பைட், மெட்ரோ ட்ரெயின் பைட், பார் பைட், கல்லூரியில் நடக்கும் பைட், ரையின் பைட், ஓப்பனிங் பைட், படத்தின் இறுதி பைட், கபடி பைட் என அனைத்து ஆக்ஷன் காட்சிகளும் செம்மையாக உள்ளன.
விஜய் மற்றும் விஜய் சேதுபதி இருவரும் போட்டி போட்டு நடித்துள்ளனர்.படத்தில் பெரிய நட்சத்திர பட்டாளமே இருந்தாலும் அர்ஜுன் தாஸ், பூவையார், மகேந்திரன் சிறப்பாக ஸ்கோர் செய்துள்ளனர்.
சாந்தனு, மாளவிகா, ஆண்ட்ரியா, கௌரி, கலக்க போவது யாரு தீனா மற்றும் சிறுவர் சீர்திருத்த பள்ளி வார்டன் ஆக வரும் சினிமாவாலா சதீஷ், மகாநதி ஷங்கர், ரமேஷ் திலக் என தங்களுக்கு கொடுத்த வேலையை சரியாக செய்துள்ளனர்.
வாத்தி காமிங் பாடலில் தளபதி பட்டையை கிளப்பியுள்ளார். இமத வயசிலும் அப்படி ஒரு ஆட்டம்.
படம் வசூல் சாதனை படைத்துள்ளது. தமிழகத்தில் மட்டுமே 2 நாளில் 45 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. ஆந்திராவில் 80% வசூலை எடுத்து விட்டனர். இனி லாபம் மட்டுமே.
இந்நிலையில் கடந்த ஆண்டு மாஸ்டர் குழுவினர் பொங்கலை எவ்வாறு கொண்டாடினர் என தயாரிப்பு நிறுவனம் தரப்பில் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் தளபதி படகுழுவினருடன் பொங்கல் பானை வைத்து கொண்டாடி மகிழ்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.