V4UMEDIA
HomeNewsKollywoodநம்பர்களால் அசால்ட்டாக மாஸ் காட்டும் கணக்கு வாத்தியார் !! விக்ரமின் கோப்ரா டீசர் வெளியீடு

நம்பர்களால் அசால்ட்டாக மாஸ் காட்டும் கணக்கு வாத்தியார் !! விக்ரமின் கோப்ரா டீசர் வெளியீடு

தமிழ் சினிமாவில் திறமையான இயக்குநர்களில் ஒருவர் அஜய் ஞானமுத்து. டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் ஆகிய மெகாஹிட் வெற்றி படங்களை கொடுத்துள்ளார். அஜய் ஞானமுத்து தற்போது சியான் விக்ரம் அவர்களை வைத்து “கோப்ரா” படத்தினை இயக்கியுள்ளார்.

Image

சியான் விக்ரம் நாயகனாக நடிக்கும் இப்படத்தில், அவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்து வருகிறார். 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் லலித்குமார் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். 

கொரோனா வைரஸ் மூலம் ஏற்பட்டுள்ள இந்த கடினமான நேரத்தில், தயாரிப்பாளர்களின் சுமையை குறைக்கும் விதமாக கோப்ரா படத்தின் இயக்குனர் அஜய் ஞானமுத்து தனது சம்பளத்தில் 40% குறைத்து கொண்டது நாம் அனைவரும் அறிந்ததே.இந்நிலையில் விஜயதசமி திருநாளான (அக்டோபர் 26) கோப்ரா படத்தின் டப்பிங் வேலைகள் துவங்கப்பட்டுள்ளது.

Cobra Teaser: Chiyaan Vikram Is an Evil Mathematician in This Intriguing  Story (Watch Video)

இந்நிலையில் கோப்ரா படத்தின் டீஸர் வீடியோ வெளியாகியுள்ளது. இது தற்போது சமுக வலைத்தளங்களில் மிக வைரலாகி வருகிறது.எல்லா பிரச்சனைகளையும் எண்களால் தீர்க்கும் கணக்கு வாத்தியார் கதாபாத்திரத்தில் சீயான் விக்ரம் நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் படத்தில் விக்ரம் போட்டுள்ள பல கதாபாத்திரங்களில் சிலவற்றை மட்டும் இந்த டீசரில் படக்குழுவினர் வெளியிட்டுள்ளது. மிகவும் வெறித்தனமாக இருக்கிறது டீஸர் பல தரப்பு ரசிகர்களும் பாராட்டி வருகின்றனர்.

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments