நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து அஜித் நடித்து வரும் படம் ‘வலிமை’. எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ஹியூமா குரேஷி, கார்த்திகேயா, பாவெல் நவகீதன், யோகி பாபு என பலர் நடித்து வருகிறார்கள்.
போனி கபூர் தயாரித்து வரும் இப்படத்தின் ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா, இசையமைப்பாளராக யுவன் பணிபுரிந்து வருகிறார்கள்.
இந்த நிலையில் தற்போது ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான புகழ் ‘வலிமை’ படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. படக்குழுவினர் இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.