V4UMEDIA
HomeNewsKollywoodரீ-ரிலீஸாகும் தளபதி விஜய் யின் "தலைவா" !! மகிழ்ச்சியில் ரசிகர்கள்

ரீ-ரிலீஸாகும் தளபதி விஜய் யின் “தலைவா” !! மகிழ்ச்சியில் ரசிகர்கள்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள படம் மாஸ்டர். இப்படத்தின் கதாநாயகியாக மாளவிகா மோகன் நடிக்கிறார். மேலும் விஜய் சேதுபதி வில்லனாகவும், சாந்தனு, அர்ஜுன் தாஸ், சஞ்சீவ், ஸ்ரீமன், ஆண்ட்ரியா, கௌரி கிஷன் என பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ளார். சேவியர் பிரிட்டோ மற்றும் லலித் குமார் இணைந்து பெரும் பொருட்செலவில் இப்படத்தை தயாரித்துள்ளனர்.

கொரோனா தொற்று சற்று குறைந்த நேரத்தில் இப்படத்தின் ரிலீஸ் திரையரங்கில் மிக பிரமாண்டமான முறையில் இருக்கும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். ஜனவரி 13 வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர். படத்தை எதிர்பார்த்து ஒட்டுமொத்த ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருகின்றனர். டிக்கெட் விற்பனை மிக வேகமாக நடைபெற்று வருகிறது.

Image

ஜனவரி 13 உலகம் முழுவதும் 5 மொழிகளில் வெளியிடப்படும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.இந்த நிலையில் 100% இருக்கைக்கு அனுமதி தமிழக அரசு தவறு செய்து விட்டதாகவும், விஜய் அவர்கள் வன்மத்துடன் குறை சொல்லும் சில போலி சமூக விரோதிகளும் வழக்கம் போல் சூரியனை பார்த்து நாய் குழைப்பது போல குறை சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்.

இதை சற்றும் கண்டு கொள்ளாமல் விநியோகஸ்தர்கள் தளபதி விஜய் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், தலைவா படத்தினை மீண்டும் ரீ-ரிலீஸ் செய்கிறார்கள். தளபதி விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இச்செய்தியனை பகிர்ந்து வருகிறார்கள்.

Most Popular

Recent Comments