தளபதி விஜய் அவர்கள் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படம் ஜனவரி 13ம் தேதி பொங்கல் விருந்தாக உலகம் முழுவதும் மிக பிரமாண்டமான முறையில் வெளியாக உள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்ததே.
’மாஸ்டர்’ படத்தின் வெளியீடு கொண்டாட்டத்தை ஏற்கனவே ஆரம்பித்துள்ள தளபதி விஜய் ரசிகர்கள் இந்த படத்தை மிகப்பெரிய வெற்றிப் படமாக்க முடிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் நடிகர் விஜய் சேதுபதி மாஸ்டர் படத்தில் நடித்தது குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் படப்பிடிப்பில் நடந்த ஒரு நெகிழ்ச்சி சம்பவத்தினை பகிர்ந்துள்ளார். அதாவது என் அம்மா விஜய் சாரை பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டதாகவும், அதனால் எனது அம்மாவை படப்பிடிப்பு தளத்திற்கு அழைத்து வந்து விஜய் சாருடன் போட்டோ எடுக்க வைத்ததாகவும் கூறினார்.அதன் பின் எனது அம்மா விஜய் சாரிடம் என் பையன் ஒழுங்கா வேலை பாக்குறானா கேள்வி கேட்டார், அதற்கு எனது அம்மா சந்தோசப்படும்படி பதில் அளித்த பின்னர் எனது அம்மா நன்றி விஜய் சார் என்று கூறியதாவும் விஜய் சேதுபதி கூறினார் .