சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் அடுத்த பிரமாண்ட தயாரிப்பான “D43” யில் தனுஷ் நாயகனாக நடிக்க, இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்குகிறார். தமிழ் சினிமாவின் முக்கிய ஆளுமைகள் இப்படத்தில் தொழில்நுட்ப குழுவிலும், நடிகர்கள் குழுவிலும் இணைந்து வருகிறார்கள். இந்த நிலையில் ரசிகர்களுக்கு பேரின்ப செய்தியாக, தமிழக இளைஞர்களின் இதய நாயகியாகவும், நடிப்பிலும் அசத்தி வரும் மாளவிகா மோகனன் இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக, நாயகியாக இணைந்திருக்கிறார்.
D43 யின் தற்போதைய நிலை குறித்து கூறும்போது…. இப்படம் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட, ஆக்சனும் உணர்வுகளும் இரண்டறக்கலந்த அட்டகாசமான கமர்ஷியல் கதையாக உருவாக்கப்பட்டுள்ளது. அனைத்து வகையான ரசிகர்களும் கண்டிப்பாக இப்படத்தினை கொண்டாடுவார்கள் என உறுதியாக நம்புகிறேன். ஜீவி பிரகாஷ் தன் இசையால் ரசிகர்களின் மனதில் தனி இடம்பிடித்து, பெரும் சாதனைகள் செய்து வரும் நிலையில் அவரது இசை இப்படத்திற்கு பெரும் பலமாக இருக்கும். மிகத்திறமை வாய்ந்த தொழில்நுட்ப குழு படத்தில் இணைந்துள்ளது. இப்படக்குழு மிகச்சரியான படைப்பை தந்து, பெரு வெற்றியை பெற்றுத்தரும் என உறுதியாக நம்புகிறேன்.
இந்நிலையில் இப்படத்தில் ஸ்ம்ருதி வெங்கட் நடிக்கவுள்ளார். தயாரிப்பு நிறுவனம் இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.