HomeNewsKollywoodஜனவரி 8-ல் வெளியாகும் "கேஜிஎஃப் - 2" டீஸர்

ஜனவரி 8-ல் வெளியாகும் “கேஜிஎஃப் – 2” டீஸர்

ஹோம்பாலே ஃபிலிம்ஸ் தயாரிக்கும் கேஜிஎஃப் சேப்டர் 2 திரைப்படத்தின் டீஸர் வரும் ஜனவரி 8-ல் வெளியாகவிருக்கிறது. ராக்கிங் ஸ்டார் யாஷ்-ன் பிறந்தநாளை ஒட்டி ஜனவரி 8 2021, காலை 10.18 மணியளவில் கேஜிஎஃப் சேப்டர் 2-வின் டீஸர் வெளியிடப்படுகிறது. ஹோம்பாலே யூடியூப் சேனலில் டீஸர் வெளியிடப்படுகிறது.

இது குறித்து ஹோம்பாலே ஃபிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “2021 புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். சினிமா ரசிகப் பெருமக்களுடனான எங்களின் இந்தப் பயணம் மிகவும் அழகானதாக அமைந்துள்ளது. இந்த அழகான பயணத்தை நாங்கள் என்றென்றும் நினைவுகூர்கிறோம். எங்களுடன் துணை நின்றமைக்கு மனமார்ந்த நன்றியை உரித்தாக்குகிறோம். கேஜிஎஃப் முதல் பாகத்திற்கு தாங்கள் தோள் கொடுத்தீர்கள். ஆகையால், அத்திரைப்படம் இந்திய சினிமாவின் பெருமித அடையாளமானது.
தற்போது, ஜனவரி 8-ல் கேஜிஎஃப் சேப்டர் 2 டீஸர் வெளியாகவிருக்கிறது. இதுவும் நிச்சயமாக இந்திய சினிமாவிற்கு பெருமை சேர்க்கும் என நம்புகிறோம். அதற்கு ரசிகப் பெருமக்களின் பலம்வாய்ந்த ஆதரவையும் அன்பையும் கோருகிறோம். இந்தப் புத்தாண்டு உங்கள் அனைவருக்கும் நேர்மறையானவற்றையும், அமைதியையும், மகிழ்ச்சியையும் சேர்க்கட்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments