புத்தாண்டு தினமான நேற்று சின்னஞ்சிறு கிளியே திரைப்படத்தின் முதல் பாடலான அழகுத்தளிரே நடிகை தன்ஷிகா அவர்களால் வெளியிடப்பட்டது, தந்தைக்கும் மகளுக்கும் இடையேயான பாசத்தை அழகியலோடு உணர்த்தும் விதமாக அமைந்துள்ளது இப்பாடல் இந்நிலையில் நேற்று மாலை ஆறு மணியளவில் வெளியிடப்பட்டது.
வெளிவந்த சற்று நேரத்தில், சமூக வலைதளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. ஆனந்த யாழை, கண்ணான கண்ணே வரிசையில் இப்பாடலும் தந்தை மகள் பாசத்தை உணர்த்தும் வகையில் வெளிவந்துள்ளதால் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது.