V4UMEDIA
HomeNewsKollywoodபாலிவுட்டில் கால் பதிக்கும் விஜய் சேதுபதி !!

பாலிவுட்டில் கால் பதிக்கும் விஜய் சேதுபதி !!

தமிழ் சினிமாவில் ஜூனியர் ஆர்ட்டிஸ்டாக நுழைந்து தனது நடிப்பின் மற்றும் அயராத உழைப்பால் பல உயரங்கலை தொட்டு மக்கள் செல்வனாக வலம் வருபவர் விஜய் சேதுபதி. தமிழில் நான்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வரும் விஜய் சேதுபதி மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட படங்களிலும் தொடர்ந்து பிஸியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது தமிழில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாநகரம் படத்தின் இந்தி ரீமேக்கில் நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தமாகியுள்ளார். விஜய் சேதுபதி நடிக்க உள்ள முதல் இந்தி படம் இது என்பதால் அவரது ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.

இந்த படத்தின் முக்கிய அப்டேட் புத்தாண்டில் வெளியாக உள்ளது. ஜனவரி 1 பிற்பகல் 3 மணிக்கு இந்த படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. எனினும் இது வரை இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Most Popular

Recent Comments