பாரம்பரிய வேளாண் திருவிழாவில் வழங்கப்படும் நம்மாழ்வார் விருது இந்த முறை தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சிவகார்த்திகேயனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக பாரம்பரிய விவசாயிகள் சங்கம் மற்றும் ஐந்திணை வேளாண் கல்வி மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளை இணைந்து ஆண்டுதோறும் பாரம்பரிய வேளாண் திருவிழாவை நடத்தி வருகின்றன. இந்த விழாவில் மறைந்த இயற்கை விவசாயியான நம்மாழ்வார் பெயரில் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த ஆண்டிற்கான நம்மாழ்வார் விருது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சிவகார்த்திகேயனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.கடந்த ஆண்டு நெல் ஜெயராமன் மகன் முழு படிப்பு செலவை ஏற்றுக்கொண்டது, நடிகர் தவசிக்கு மருத்துவ செலவிற்கு உதவியது என தொடர்ந்து பல்வேறு நற்செயல்களுக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.