V4UMEDIA
HomeNewsKollywoodதளபதி விஜய் யின் "மாஸ்டர்" படத்தை திரையரங்கில் பாருங்கள் - தனுஷ் ட்வீட்

தளபதி விஜய் யின் “மாஸ்டர்” படத்தை திரையரங்கில் பாருங்கள் – தனுஷ் ட்வீட்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள படம் மாஸ்டர். இப்படத்தின் கதாநாயகியாக மாளவிகா மோகன் நடிக்கிறார். மேலும் விஜய் சேதுபதி வில்லனாகவும், சாந்தனு, அர்ஜுன் தாஸ், சஞ்சீவ், ஸ்ரீமன், ஆண்ட்ரியா, கௌரி கிஷன் என பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ளார். சேவியர் பிரிட்டோ மற்றும் லலித் குமார் இணைந்து பெரும் பொருட்செலவில் இப்படத்தை தயாரித்துள்ளனர். கொரோனா தொற்று கட்டுப்பாட்டுக்கு வந்த பிறகு இப்படத்தின் ரிலீஸ் திரையரங்கில் மிக பிரமாண்டமான முறையில் இருக்கும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். கண்டிப்பாக பொங்கல் வெளியாகும் என சினிமா வட்டாரத்தில் தெரிவித்துள்ளனர். படத்தை எதிர்பார்த்து ஒட்டுமொத்த ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருகின்றனர்.

மாஸ்டர் திரைப்படத்தின் அனைத்து பாடல்களும் பெரிய ஹிட். குறிப்பாக தளபதி விஜய் அவர்கள் பாடிய “குட்டி ஸ்டோரி” பட்டி தொட்டி வரை பெரிய ரீச்.இந்த நிலையில் மாஸ்டர் திரைப்படத்தின் ரிலீஸ் எப்போது என பெரிய குழப்பமே இருந்த நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 13 உலகம் முழுவதும் 5 மொழிகளில் வெளியிடப்படும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில் தளபதி விஜய்யின் ’மாஸ்டர்’ படம் குறித்து தனது டுவிட்டரில் நடிகர் தனுஷ் கூறியிருப்பதாவது: விஜய் அவர்களின் ’மாஸ்டர்’ ஜனவரி 13 அன்று வெளியாவது சினிமா பிரியர்களுக்கு ஒரு சிறப்பான செய்தியாகும். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் திரைப்படங்களைப் பார்ப்பது தியேட்டர் கலாச்சாரத்தை மீண்டும் வளர்க்க உதவும் என நம்புகிறேன். தியேட்டர் அனுபவம் போல எதுவும் இல்லை. தயவுசெய்து அனைத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து ’மாஸ்டர்’ படத்தை திரையரங்குகளில் பாருங்கள்’ என தனுஷ் குறிப்பிட்டுள்ளார்.

Most Popular

Recent Comments