தயாரிப்பாளர் K.E.ஞானவேல் ராஜா அவர்களின் ஸ்டூடியோ க்ரீன் (Studio Green) நிறுவனம் வித்தியாசமான முயற்சிகள் மற்றும் தொடர் வெற்றி படங்களால் தென்னிந்திய சினிமாவின் மதிப்புமிகு அடையாளங்களுள் ஒன்றாக விளங்குகிறது.
எஸ் டி ஆர் மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்க ஓபிலி N. கிருஷ்ணா இயக்கத்தில் தயாரிப்பாளர் K.E.ஞானவேல் ராஜா ஸ்டுடியோ க்ரீன் (Studio Green) நிறுவனம் சார்பில் தயாரிக்கும் படத்திற்கு “பத்து தல” எனப் பெயரிடப்பட்டுள்ளது. இயக்குநர் ஓபிலி N. கிருஷ்ணா அவர்களும் தயாரிப்பாளர் K.E.ஞானவேல் ராஜா அவர்களும் திரையுலகில் ஒன்றாக பயணத்தை தொடங்கியவர்கள். நீண்ட காலத்திற்கு பிறகு இருவரும் மீண்டும் இணைந்திருப்பது இருவருக்கும் பெரு மகிழ்ச்சியை அளித்திருக்கிறது.
இத்திரைப்படம் முடிவான உடனேயே அவரது கதாப்பாத்திரத்தை ஒட்டி, மிகச்சரியான, அதிரடியான தலைப்பை தேடினோம். பல்வேறு பெயர்களை பரிசீலித்த பின்னால் “பத்து தல” தலைப்பு உறுதிசெய்யப்பட்டது.
இந்த நிலையில் “பத்து தல” திரைப்படத்தில் கௌதம் கார்த்திக் ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்த நிலையில் தற்போது படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளனர்.
ப்ரியா பவானிசங்கருக்கு இன்று (டிசம்பர் 31) பிறந்தநாளை அடுத்து அவருக்கு ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து, ‘பத்து தல’ படத்தின் புதிய போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளது.