V4UMEDIA
HomeNewsKollywoodஅகில இந்திய திரைப்பட கூட்டமைப்பு தலைவரானார் கலைப்புலி தாணு

அகில இந்திய திரைப்பட கூட்டமைப்பு தலைவரானார் கலைப்புலி தாணு

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத பாரம்பர்ய தயாரிப்பு நிறுவனமாக கலைப்புலி இண்டர்நேஷனல், V கிரியேஷன்ஸ் முத்திரை பதித்துள்ளது.
தமிழ் திரைப்பட துறையில் 1971ல்விநியோகஸ்தராக தனது பயணத்தை தொடங்கியவர் கலைப்புலி தாணு

தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தலைவராக, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவராக பொறுப்பேற்றுபதவிக்கு பெருமை சேர்த்தவர் கலைப்புலி தாணு

இந்திய திரைப்பட கூட்டமைப்பின் 67வது பொதுக்குழுவில் தலைவராக ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்

1971 ல் தமிழ் சினிமாவில் விநியோகஸ்தராக தனது திரைப்பயணத்தை தொடங்கிய கலைப்புலி தாணு அவர்களின் ஐம்பதாவது ஆண்டுதிரைப் பயணத்தில் அகில இந்திய திரைப்பட கூட்டமைப்பின் தலைவராக ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டிருப்பது அவரது திரைத்துறை சேவைக்கான உயரிய அங்கீகாரம் என்றால் மிகையில்லை

சினிமாவுக்குள் தயாரிப்பாளராக, விநியோகஸ்தராக பயணிப்பவர்களுக்கு மத்தியில் கடந்த கால் நூற்றாண்டுகளாக பிரம்மாண்டமான படங்களை தயாரித்து வெற்றிபெற்றதன் மூலம் தமிழ் சினிமா இவரை சுற்றி சுழல்கிறது என்றே கூறலாம்

நடிகர்களின் கால்ஷீட்டுக்காக தயாரிப்பாளர்கள் காத்துக்கொண்டிருக்கும் தமிழ்சினிமாவில் கலைப்புலி தாணுவின் தயாரிப்பில் கதாநாயகர்கள் காத்திருக்கின்றனர் என்கிறார் தயாரிப்பாளர் காட்ரகட் பிரசாத்தமிழ் திரையுலகம் சார்பாக பழம்பெரும் தயாரிப்பாளர்கள்.எஸ்.எஸ்.வாசன், நாகிரெட்டி, ஆகியோர் இப்பதவியை அலங்கரித்திருக்கிறார்கள் அந்த வரிசையில் அகில இந்திய திரைப்பட கூட்டமைப்பின் 71வது தலைவராக ஜனவரி 1/2 021 அன்று கலைப்புலி தாணு பதவியேற்க உள்ளார்

இவருடன் தென்னிந்திய சினிமாவில் இருந்து துணை தலைவர்களாகC, கல்யாண்,C.P.விஜயகுமார்,N.M சுரேஷ், ஆனந்தா L.சுரேஷ், T.P.அகர்வால், ஆகியோர் பொறுப்பேற்க உள்ளனர்

செயலாளர்களாக ரவி கொட்டாரக்காரா, ஹரிசந்த் ஆகியோர் பதவி ஏற்க உள்ளனர்ஜனவரி 1/2021 முதல் ஒரு வருடத்திற்கு தலைவர் பொறுப்பில் கலைப்புலிதாணுபதவி வகிப்பார்

Most Popular

Recent Comments