உறுமீன், மரகத நாணயம், ராட்சசன் என பல தரமான வெற்றி திரைப்படங்களைத் தயாரித்துள்ளார் ஆக்ஸ்ஸ் பிலிம் ஃபேக்டரி நிறுவனம் தில்லி பாபு. இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் காதலர் தினத்தில் இவரின் தயாரிப்பில் ‘ஓ மை கடவுளே’ திரைப்படம் வெளியாகி இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது.
அறிமுக இயக்குனர் அஷ்வத் மாரிமுத்து இயக்கி இருந்தார். அசோக் செல்வனுடன் ரித்திகா சிங் மற்றும் வாணி போஜன் ஆகியோர் நடித்திருந்தனர். இந்நிலையில் இந்த படத்தின் அசுர வெற்றியை பற்றி நன்கு அறிந்த தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான பிவிபி ரிலீஸுக்கு முன்னரே இதன் ரீமேக் ரைட்ஸ்களை வாங்கியது.
மேலும் அப்படத்தை அஷ்வந்த் மாரிமுத்துவையே இயக்கவும் ஒப்பந்தம் செய்தது. கொரோனா காரணமாக அதன் பணிகள் தாமதமானதால் இப்போது பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. அசோக் செல்வன் நடித்த கதாபாத்திரத்தில் விஸ்வாக் சென் நடிக்க உள்ளார். மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் விவரம் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.