Home News Kollywood என்ன நண்பா ரெடியா ? தளபதி விஜய் யின் மாஸ்டர் பொங்கல் முதல் !!

என்ன நண்பா ரெடியா ? தளபதி விஜய் யின் மாஸ்டர் பொங்கல் முதல் !!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள படம் மாஸ்டர். இப்படத்தின் கதாநாயகியாக மாளவிகா மோகன் நடிக்கிறார். மேலும் விஜய் சேதுபதி வில்லனாகவும், சாந்தனு, அர்ஜுன் தாஸ், சஞ்சீவ், ஸ்ரீமன், ஆண்ட்ரியா, கௌரி கிஷன் என பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ளார். சேவியர் பிரிட்டோ மற்றும் லலித் குமார் இணைந்து பெரும் பொருட்செலவில் இப்படத்தை தயாரித்துள்ளனர். கொரோனா தொற்று கட்டுப்பாட்டுக்கு வந்த பிறகு இப்படத்தின் ரிலீஸ் திரையரங்கில் மிக பிரமாண்டமான முறையில் இருக்கும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். கண்டிப்பாக பொங்கல் வெளியாகும் என சினிமா வட்டாரத்தில் தெரிவித்துள்ளனர். படத்தை எதிர்பார்த்து ஒட்டுமொத்த ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருகின்றனர்.

மாஸ்டர் திரைப்படத்தின் அனைத்து பாடல்களும் பெரிய ஹிட். குறிப்பாக தளபதி விஜய் அவர்கள் பாடிய “குட்டி ஸ்டோரி” பட்டி தொட்டி வரை பெரிய ரீச்.கடந்த மாதம் மாஸ்டர் டீஸர் வெளியிடப்பட்டது. ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. டீஸர் வெளியான சில நிமிடங்களிலே பல சாதனைகள் படைத்துள்ளது மாஸ்டர் தமிழ் டீஸர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

இந்த நிலையில் மாஸ்டர் திரைப்படத்தின் ரிலீஸ் எப்போது என பெரிய குழப்பமே இருந்த நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 13 உலகம் முழுவதும் 5 மொழிகளில் வெளியிடப்படும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.