V4UMEDIA
HomeNewsKollywoodஅனிதா சம்பத்தின் தந்தையும் எழுத்தாளருமான ஆர்.சி.சம்பத் மரணம்!

அனிதா சம்பத்தின் தந்தையும் எழுத்தாளருமான ஆர்.சி.சம்பத் மரணம்!

செய்தியாளராகவும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் கலந்து கொண்டு விளையாடிய அனிதா சம்பத்தின் தந்தை இறந்த செய்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்து பிரபலமானவர் அனிதா சம்பத். 2 .0 போன்ற சில படங்களில் செய்தியாளராகவே தோன்றி பிரபலமானார். இவருக்கென தனி ரசிகர்கள் கூட்டமும் உள்ளது. ஆரம்ப காலத்தில் இருந்து மிகவும் கஷ்டப்பட்டு இந்த நிலையை எட்டிய அனிதா சம்பத், சமீபத்தில் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு விளையாடினார்.

மிகவும் விறுவிறுப்பான போட்டியாளரான இவர், ஆரி பற்றி விமர்சித்ததால் ரசிகர்கள் கோவத்திற்கு ஆளாகி. கடந்த வாரம் தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் முன்பு கூட தொகுப்பாளர் கமலஹாசனிடம் இந்த வருட ஆங்கில புத்தாண்டை குடும்பத்துடன் கொண்டாட வேண்டும் என்கிற ஆசையை வெளிப்படுத்தினார்.

இந்நிலையில், சந்தோஷமாக வெளியே வந்த, அனிதா சம்பத் குடும்பத்தில் இடி போல் நிகழ்ந்துள்ளது ஒரு துக்க சம்பவம். அனிதா சம்பத்தின் தந்தை ஆர்.சி.சம்பத் உடல்நல பிரச்சனை காரணமாக உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இவர் சிறந்த கதை ஆசிரியர். பல புத்தகங்களை எழுதியுள்ளார். அனிதா சம்பத் தந்தை மரணத்திற்கு பலரும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகின்றனர் .

Most Popular

Recent Comments