நடிகர் யோகி பாபுவுக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. நேற்று (27-12-2020) இரவு 7.55 மணிக்கு ஆண் குழந்தைக்கு அப்பா ஆகியுள்ளார். தாயும் சேயும் நலமாக உள்ளனர்.
நகைச்சுவை நடிப்பில் புயல்வேகத்தில் முன்னேறிய யோகிபாபு, திருமணத்தை தள்ளிப்போட்டுக்கொண்டே வந்தார். சிறு சிறு கேரக்டரில் நடித்து வந்த யோகி, ஹீரோவாக நடிக்கும் அளவுக்கு முன்னேறினார்.
பிஸியாக நடித்துக்கொண்டிருந்ததால், திருமணத்தை தள்ளி போட்டுக்கொண்டே வந்தவர், கடந்த 5-2-2020 அன்று திருத்தணி அருகே உள்ள குலதெய்வம் கோயிலில் வைத்து பிசியோதெரபி டாக்டர் மஞ்சு பார்கவி என்பவரை திருமணம் செய்தார்.
இந்நிலையில், நேற்று (27-12-2020) இரவு 7.55 மணிக்கு ஆண் குழந்தைக்கு அப்பா ஆகியுள்ளார். தற்போது தாயும் சேயும் நலமாக உள்ளனர்.
திரையுலக பிரபலங்கள் பலரும் யோகிபாபுவுக்கு வாழ்த்து சொல்லி வருகின்றனர்.